கலியாவூரில் முஸ்லிம் முன்னணி கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் எலும்பு மூட்டு மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் கிராமத்தில் முஸ்லிம் முன்னணி கழகம், திருநெல்வேலி தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை, தூத்துக்குடி திரவியம் எலும்பு மூட்டு மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் எலும்பு மூட்டு மருத்துவ முகாம் நடந்தது.
கலியாவூர் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் முன்னணி கழக கலியாவூர் கிளை தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். இமாம் முகமது காமில் இறைவசனம் வாசித்தார். ஒன்றிய பொருளாளர் முகமது காசிம் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் தாரிக், மாநில ஒருங்கிணைப்பாளர் அபுல்ஹசன், மாவட்ட துணைச் செயலாளர் முகமது அலியார், ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் குத்துபுதீன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் செய்யது அலி பாதுஷா, கருங்குளம் ஒன்றிய செயலாளர் முகமது ஹாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை ஒருங்கிணைப்பாளர் யூசர், கலியாவூர் ஜமாத் தலைவர் ஷாலி, ஜமாத் செயலாளர் ஷேக் தாவுது, கலியாவூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணைத்தலைவர் பரமசிவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்த முகாமினை முஸ்லிம் முன்னணி கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை செய்யது, முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறந்த களப்பணி பணியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை எலும்பு மூட்டு மருத்துவம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் முன்னணி கழக கலியாவூர் கிளை சார்பாக செய்யப்பட்டிருந்தது.


