செக்காரக்குடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் சிறப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமி தலைமையில் வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேவியர், உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர்கள் கனகலெட்சுமி, ராமசாமி, ஆவின் மருத்துவர் கருணன், கூட்டுறவு துறை சார்பில் சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் விவசாயிகள் சார்பில் பல்வேறு விதமான தீர்வுகள் கேட்டு மனுக்கள் வழங்கப்பட்டது. அவை அனைத்தும், அந்த அந்த துறையின் சார்பில் தீர்வுக்காக பெற்றுக் கொள்ளப்பட்டது. சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.
தெய்வசெயல்புரம் கால்நடை மருத்துவர் சூர்யா கலந்து கொண்டு கால்நடைகளுக்கான தடுப்பூசி, சினை ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கி கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். வேளாண்மை உதவி அலுவலர் பரமசிவன், மானாவாரி உழுந்து பயிரிடுதல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ஆதிமூலபெருமாள் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்.


