முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நாவல் வெள்ளத்துரை. சென்னை புத்தக கண்காட்சியில் இந்த நூல் நாற்கரம் பதிப்பக அரங்கில் வைத்து வெளியிடப்படடது. இந்த நூலை பாண்டிச்சேரி முன்னாள் செயலாளர் சுந்தரேசன் அவர்கள் வெளியிட அயோத்திப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். ராட்டினம் இயக்குனர் தங்கசாமி தலைமை தாங்க திரைப்பட வசனகர்த்தா மற்றும் எழுத்தாளர் ஜா. தீபா, எழுத்தாளர் முகில், சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார், செயலாளர் சங்கர் மணி, தாமரை பிரதர்ஸ் மேலாளர் ரவி, ஊடகவியாளர் மற்றும் சொற்பொழிவாளர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் பொன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிப்பாளர் படைப்பு ஜின்னா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் டாப் டிவி ராஜா, திரைப்பட துணை இயக்குனர் கற்குவேல், சித்த மருத்துவர் பொன் மணி, பொன் ரவி, ஸ்டெல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பதிப்பாளர் ஜின்னா தலைமையில் படைப்பு குழுவினர் செய்திருந்தனர்.


