தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் தெற்கு புதுதெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அஸ்ட்ரானமி நிகழ்வு நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் தமிழக முழுவதும் 5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வு மூலம் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் வானியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரின்ஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட அஸ்ட்ரோ கிளப் பொருளாளர் காஞ்சனா முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்துகொண்டு டெலஸ்கோப் மூலம் தொலைதூர பொருட்களை பார்வையிடுவது குறித்தும்,வானவியல் குறித்தும் செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
மாணவர்களுக்கு கோள்கள் பற்றிய விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் ஜான்சிராணி, ஜாய்ஸ், உஷா, நந்தினி, பவானி, பத்மா உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெருமாள் நன்றி கூறினார்.


