தூத்துக்குடியில் நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வந்த 1400 கிலோ ரேஷன் அரிசியை மரைன் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான நேற்று இரவு வெள்ளப்பட்டி சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 35 பைகளில் மொத்தம் 1400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இது தொர்பாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த பூபாண்டியபுரம் கருப்பசாமி (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


