தூத்துக்குடி அருகே கார் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் உயிரிழந்தனர். 4 குழந்தைகள் உட்பட 6பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9பேர் திருச்செந்தூருக்கு காரில் வந்துவிட்டு திரும்பி ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த கார் முள்ளக்காடு பழையகாயல் இடையே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்து, காரை ஓட்டி வந்த பால்முத்து பிரபு (39), மற்றும் கந்தையா மனைவி தமிழ்செல்வி (69) ஆகிய 2பேரும் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பாண்டிசுதா சற்குன லில்லி (37) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


