காயல்பட்டினத்தில் மாபெரும் முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மங்களவாடி கிராமத்தில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலம் காயல்பட்டினம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் வைத்து மாபெரும் முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமை என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் துணை பொது மேலாளர் (மனித வளம்) எஸ் சரவணன், துணை பொது மேலாளர் (கண்காணிப்பு துறை) ராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பேரவை உறுப்பினரும் , மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி . முன்னிலை வகித்தார். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஆ ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்..
முகாமில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆறுமுகச்செல்வன், மதர் சமூக சேவை நிறுவன அமைப்பாளர் சின்னதுரை, மங்கள வாடி ஊர் கமிட்டி தலைவர் நாகராஜ் மகேஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் தேவனாசி, டாக்டர் சப்னா ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து பிரச்சனை உள்ளவர்களுக்கு கண் மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் 120 நபர்களுக்கு மூக்கு கண்ணாடியும். மேலும் சொட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. கண் புரை நோயாளிகளுக்கு என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் சமூக பொறுப்பு திட்டத்தின் உதவியுடன் ஆபரேஷன் இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்படுதோடு உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை மருத்துவம் தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து வசதி அனைத்து இலவசம் மேலும் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மறு பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
முகாமில் 223 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். . இதில் 120 பேருக்கு இலவச மூக்குகண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்கு 15பேர் தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முகாமில் மங்களவாடி ஊர் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி நன்றி கூறினார்.
முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் , மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


