குவைத் அரசு அருங்காட்சியகத்தில் அபூர்வ பழங்கால பொருள்கள் சேகரிப்பை பார்த்துக்கொண்டேசெல்கிறோம். ஆங்காங்கே பல பராம்பரியங்கள் உருவமாக செய்து காட்சி படுத்தப்பட்டிருந்தது. அதை பார்க்கும் போது பழங்காலத்து மனிதனே நமது முன்னால் இருப்பது போலவே நமக்கு தோன்றியது. அதை பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகருகிறோம்.
குறிப்பிட்ட நேரத்துக்-குள் நாங்கள் அருங்காட்சியகத்தினை பார்த்து முடிக்க வேண்டும். ஏன் என்றால் அருங்காட்சியகம் அடைக்கும் நேரம் வந்து விட்டது எனவே வேகமாக நாங்கள் பொருள்களை பார்க்கத் தொடங்கினோம். அங்கே பல கதவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை “பாப் பு கூக்கா” என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கதவு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு பெரிய கதவுக்குள் ஒரு சிறிய கதவு இருந்தது. சிறிய கதவு மக்கள் நுழைவதற்கும், பெரிய கதவு விலங்குகளுக்கும் பெரிய பொருட்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
அடுத்து அல் மங்கூர் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டோம்.
இது ஒரு செவ்வக வடிவ துணியுடன் இணைக்கப்பட்ட உலர்ந்த செம்மறி ஆடு குளம்புகளைக் கொண்டுள்ளது, அது நடனக் கலைஞர் தனது இடுப்பைச் சுற்றிக் கட்டியிருக்கிறது. அது நடனமாடும் போது நடனக் கலைஞருக்கு தாளத்தை வழங்கும் “அல் தன்பூரா” என்ற இசைக்கருவிக்கு பாராட்டுக்குரிய அழகான இசையை உருவாக்குகிறது.
அடுத்து ஒரு இசை கருப்பு கொண்ட தொகுப்பை பார்தோம். “ட்ரம்பெட்” என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
“லீவா” ஒரு ஆப்பிரிக்க வம்சாவளி கலைக்கு பயன்படுத்தப்படும் மர ஊதும் இசைக்கருவி.
2- டிரம்ஸ் சேகரிப்பு.
3- “தம்பூரா”: இசை தாளங்களை வாசிப்பதற்கான இசைக்கருவி. ஆகியவை இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்து.
அடுத்து குவைத்தில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வானொலியை வகைகளைகண்டோம்.
இதில்.
1- ரேடியோ பிலிப்ஸ் பிராண்ட், ஹாலந்தில் தயாரிக்கப்பட்டது.
2- ரேடியோ புஷ் பிராண்ட், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது.
3- ரேடியோ கேம்பிரிட்ஜ் பிராண்ட், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது.
4- ரேடியோ வைகா பிராண்ட், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது.
5- கடிகாரத்துடன் கூடிய வானொலி.
6- ரேடியோ சியரா பிராண்ட், போன்ற ரேடியோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்துக்கொண்டே அடுத்த இடத்துக்கு வந்தோம். அங்கே போனோகிராம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
உள்ளூரில் போனோகிராம் என்பது பிஷ்டக்டட் என்று அழைக்கப்படும் இசை வாசிக்கும் கருவி. போனோகிராம் குடும்ப வீடுகளில் கிடைக்கவில்லை, மாறாக காபி பரிமாறும் இடங்களில் அல்லது அவர்கள் அதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சந்தர்ப்பங்களுக்கு வாடகைக்கு விடுவார்கள் என குறிப்பு எழுதி வைத்திருந்தார்கள்.
அடுத்து முடி திருத்தும் கடையை பார்த்தோம் அந்த அருங்காட்சியகத்தில் பார்த்தோம். இந்த கடையை “அல் முஹாசின்” என்று அழைக்கிறோம்.
பார்பர்ஸ் பாரம்பரியமாக வாடிக்கையாளர்களைத் தேடுவதற்காக தனது முடிதிருத்தும் கருவிப் பெட்டியுடன் சந்தைகளில் சுற்றித் திரிவார்கள். முடி திருத்துபவர்கள் ஆணி வெட்டுதல் மற்றும் பல் பிரித்தெடுத்தல் மற்றும் சில சிறிய காயங்களை சரிசெய்வது போன்ற கூடுதல் வேலைகளில் ஈடுபடுவார்கள்.
















நம்ம ஊரில் கூட முடி திருத்தும் தொழில் செய்பவர்களை மருத்துவர்கள் என்றுதான்கூறுவோம். மும்பை பகுதியில் காதில் அழுக்கு எடுப்பவர்கள் சுற்றித்திரிவார்கள். இவர்களும் வைத்தியர்கள் போலத்தான். அது போலவே ஒரு காலத்தில் குவைத் மநாகரில் முடிதிருத்துவர்கள் பஜார்களில் அலைந்து திரிந்து உள்ளார்கள்.
அடுத்து பிரமாண்டமான இயந்திரம் ஒன்றை பார்த்தோம். அல் டெண்டர்மா மற்றும் அல் நம்லேட் என்பது அதன் பொருளாகும்.
1. “நம்லேட்” எனப்படும் பிரபலமான குளிர்பானத்தை தயாரித்து பாட்டிலில் அடைக்கும் இயந்திரம்.
2. உள்ளூரில் “போத்தா” அல்லது “டெண்டர்மா” என்று அழைக்கப்படும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான குளிர்பதனக் கருவி. என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்சியை பார்த்தபடியே அடுத்த இடத்துக்கு சென்றோம்.
அடுத்து விதவிதமாக ஜாடிகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
1- தண்ணீருக்கான பெரிய மட்பாண்ட ஜாடி.
2- உள்நாட்டில் “டப்பா” என்று அழைக்கப்படும் நெய்யை சேமிப்பதற்காக விலங்குகளின் தோலால் மூடப்பட்ட பெரிய ஜாடி.
3- அரிசி மற்றும் கோதுமை தானியங்கள் போன்ற பெரிய அளவிலான விதைகளை சேமிக்கப் பயன்படும் பித்தளை ஜாடி. போன்றவை இந்த ஜாடி பட்டியலில் அடங்கும்.





அடுத்து கோல்ட் ஸ்மித் என்று அழைக்கப்படும் இடத்தினை பார்க்கிறோம்.
தங்கம் மற்றும் வெள்ளி நகை வியாபாரம் செய்பவர். கிரிட்டிட் உருவாக்கம் கைமுறையாக செய்யப்பட்டது.
தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
பல குழந்தைகள் பிரபலமான பாரம்பரிய விளையாட்டுகளில் சிலவற்றை விளையாடுகிறார்கள்.
அதை தொடர்ந்து மிக அதிகமான பழைய படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
குவைத்தின் வாழ்க்கையை விவரிக்கும் பழைய படங்களின் குழு 1942 ஆம் ஆண்டுக்கு முந்தையது.
மற்றொரு இடத்தில் அல்-மெத்வாஸ் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கயிற்றால் இணைக்கப்பட்ட இயந்திரத்தின் கீழ் இரண்டு மர துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஃபரீட் என்ற தலைப்பில் காட்சிப்படுத்துப்பட்டுள்ளது. இதில் பெரிய நூல் சுருள்களை உருவாக்கும் சாதனம் என காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
மூன்றாவது உள்ள கண்காட்சியை பார்ப்பதற்காக முயற்சித்த போது அந்த கண்காட்சியை அடைத்து விட்டார்கள். எனவே ஏமாற்றத்துடன் திரும்பினோம்.
இதுவரை பார்த்த அருங்காட்சியகங்கள் மனதை கொள்ளை கொள்வதாகவே இருந்தது. அடுத்து ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது மூன்றாவது கண்காட்சியை நிச்சயம் பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன் கிளம்பினேன்.
குவைத்தினை பொறுத்தவரை நிறைய கற்றுகொள்ள வேண்டியது உள்ளது. எனவே தான் இந்த அருங்காட்சியகம் முழுவதையும் நாம் கண்கூட காணவேண்டியது உள்ளது.
குவைத் மத்திய கிழக்கில் சவுதி அரேபியா மற்றும் ஈராக் எல்லையில் அமைந்துள்ள ஒரு கண்கவர் நாடு. இது அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், நவீன கட்டிடக்கலை மற்றும் அதிர்ச்சியூட்டும் இயற்கை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. நீங்கள் ஒரு தனித்துவமான பயண அனுபவத்தைத் தேடுகிறீர்களானால், குவைத் கண்டிப்பாக பார்வையிடத் தகுந்தது. உங்கள் பயண பட்டியலில் குவைத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான சில வேடிக்கையான உண்மைகள் மற்றும் காரணங்கள் இங்கே உள்ளன.
குவைத் நவீன எண்ணெய் ஆய்வின் பிறப்பிடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 1938 ஆம் ஆண்டில், நாட்டில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு சிறிய பாலைவன நகரத்திலிருந்து ஒரு வளமான தேசமாக மாற்றப்பட்டது. இன்று, குவைத் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. இது வணிக மற்றும் முதலீட்டிற்கான மையமாக உள்ளது. எண்ணெய் தொழில் தவிர, குவைத் அதன் துடிப்பான கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கும் பெயர் பெற்றது. ஈராக்கில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் தேசிய தினம் மற்றும் விடுதலை நாள் உட்பட ஆண்டு முழுவதும் பல பண்டிகைகளை குவைத் கொண்டாடுகிறது.
இந்த திருவிழாக்களில், பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகளை நீங்கள் காணலாம். குவைத்துக்குச் செல்வதற்கு மற்றொரு காரணம் அதன் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை. குவைத் கோபுரங்கள் உட்பட பல நவீன வானளாவிய கட்டிடங்கள் இந்நாட்டில் உள்ளன. அவை நகரத்தின் பரந்த காட்சியை வழங்குகிறது. உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கிராண்ட் மசூதியையும் நீங்கள் பார்வையிடலாம். இது இஸ்லாமிய வடிவமைப்புகள் மற்றும் அழகான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குவைத் விமானம் மூலம் எளிதில் சென்ற வரலாம். பல சர்வதேச விமான நிறுவனங்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு பறக்கின்றன. நீங்கள் அண்டை நாடுகளில் இருந்து வருகிறீர்கள் என்றால், நீங்கள் கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யலாம். இருப்பினும், சில நாடுகளுக்கு குவைத்தில் நுழைவதற்கு விசா தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்கள் பயணத்தை முன்பதிவு செய்வதற்கு முன் தேவைகளை சரிபார்க்கவேண்டும். குளிரான மாதங்களில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலநிலை மிதமானதாகவும், இதமாகவும் இருக்கும் போது குவைத்துக்குச் செல்ல சிறந்த நேரம். கோடை மாதங்களில், வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இதனால் நகரத்தை சுற்றிப்பார்ப்பது கடினமாக இருக்கும். கோடைக்காலத்தில் நீங்கள் சென்று வர முடிவு செய்தால், லேசான ஆடைகளை அணியவும்.
குவைத் டவர்ஸைப் பார்வையிடவும் – இந்த சின்னமான கோபுரங்கள் நகரத்தின் பிரமிக்க வைக்கும் காட்சியை வழங்குகின்றன, மேலும் குவைத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.
கிராண்ட் மசூதியை ஆராயுங்கள் – இந்த அழகான மசூதி உலகின் மிகப்பெரிய ஒன்றாகும் இஸ்லாமிய வடிவமைப்புகள் மற்றும் அழகான குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தி அவென்யூஸில் ஷாப்பிங் செய்யுங்கள் – இந்த மிகப்பெரிய ஷாப்பிங் மால் மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் மற்றும் பரந்த அளவிலான கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைகொண்டுள்ளது.
குவைத் தேசிய அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும் – இந்த அருங்காட்சியகம் குவைத் கலை, இசை மற்றும் மரபுகள் பற்றிய கண்காட்சிகளுடன் நாட்டின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காட்சிப்படுத்துகிறது.
கார்னிச் வழியாக உலா செல்லுங்கள் – இந்த அழகிய நீர்முனை உலாவும் அரேபிய வளைகுடாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்குகிறது மற்றும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு பிரபலமான இடமாகும்.
குவைத் பாலைவனத்தை ஆராயுங்கள் – பாலைவன சஃபாரியில் சென்று குவைத் பாலைவனத்தின் அழகை அனுபவிக்கவும். அதன் உருளும் மணல் திட்டுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் சூரிய அஸ்தமனமும் நம்மை பிரமிக்க வைக்கும்.
குவைத் பயணிகளுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹோட்டல்கள் முதல் ஆடம்பரமான ரிசார்ட்டுகள் வரை பலவிதமான தங்கும் வசதிகளை வழங்குகிறது. குவைத்தில் உள்ள சில சிறந்த ஹோட்டல்கள் சிலவற்றை பட்டியலிடுவோம்.
ஆடம்ஸ் ஹோட்டல் – நவீன வசதிகளுடன் கூடிய ஸ்டைலான அறைகளை வழங்குகிறது மற்றும் குவைத் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
அல் கௌட் பீச் ஹோட்டல் – கடற்கரையோர ஹோட்டல். அரேபிய வளைகுடாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்குகிறது மற்றும் தனியார் கடற்கரை, குளம் மற்றும் ஸ்பா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சாரே பிரைம் சூட்ஸ் – என்ற ஆடம்பரமான ஹோட்டல் நவீன வசதிகளுடன் கூடிய விசாலமான அறைகளை வழங்குகிறது மற்றும் நாகரீகமான சால்மியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுவிஸ்-பெலின் ஷார்க் என்ற நவீன ஹோட்டல் இலவச வைஃபை வசதியுடன் கூடிய வசதியான அறைகளை வழங்குகிறது மற்றும் ஷார்க் மாவட்டத்தில் பல இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
சாரே ஹோட்டல் என்பது அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ளது. – இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹோட்டல் சமையலறையுடன் கூடிய விசாலமான அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்குகிறது மற்றும் குவைத் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
குவைத்திற்கு பயணம் செய்யும்போது, நாம் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் மரபுகளை மதிக்க வேண்டியது அவசியம். மசூதிகள் அல்லது பிற மதத் தலங்களுக்குச் செல்லும்போது அடக்கமாக உடையணிந்து, செல்ல வேண்டும். பொது இடங்களில் மது அருந்தக் கூடாது போன்ற உள்ளூர் சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் விழிப்புடன் இருப்பது அவசியம்.
குவைத்தை சுற்றி வருவது எளிது, பல போக்குவரத்து வசதிகள் உள்ளன. டாக்ஸிகள் எளிதில் கிடைக்கின்றன, மேலும் பல ஹோட்டல்கள் பிரபலமான இடங்களுக்கு ஷட்டில் சேவைகளை வழங்குகின்றன. நீங்கள் ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது பேருந்துகள் அல்லது மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்தலாம். குவைத்தில் உங்கள் ஹோட்டலை முன்பதிவு செய்யும் போது, மலிவு விலையில் முன்பதிவு செய்யAgoda.com ஐப் பயன்படுத்த மறக்காதீர்கள். Agoda.com குவைத்தில் பலதரப்பட்ட ஹோட்டல்களை வழங்குகிறது, பட்ஜெட்டுக்கு ஏற்ற ஆடம்பரமான ரிசார்ட்டுகள் வரை, உங்கள் பயணத்திற்கான சரியான தங்குமிடத்தைக் கண்டறிய விலைகள் மற்றும் வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது.
குவைத் சம்பந்தப்பட்ட இந்த தகவலையெல்லாம் நமக்கு கூகுள் மிக அருமையாக தருகிறது.
அருங்காட்சியத்தினை விட்டு வெளியே வந்தோம். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. மாலையில் நிகழ்ச்சி. அதன் பின் ஊருக்கு கிளம்பி வேண்டும். அதற்குள் இரண்டு மணி நேரம் உள்ளது. என்ன செய்யலாம்.
சரவணன் அய்யாவிடம் குவைத்தில் கடலுக்கு நடுவே கட்டப் பட்டுள்ள 30 கிலோமீட்டர் பால உள்ளது என்று கேள்விப்பட்டேன். அந்த பிரமாண்டமான பாலம் புபியான் தீவை (Bubiyan island) குவைத் நகரத்துடன் இணைக்கிறது.
அந்த பாலத்துக்கு ஜபர் பிரிட்ஜ் என்ற பெயர்.
அந்த பாலத்தினை காணலாம் என முடிவு செய்தோம்.
(குவைத் பயணம் அடுத்து வாரம் முடியும்)


