அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. நான் சிறுவனாக இருந்த போது டூரிங்டாக்கீஸ் சினிமா பார்க்கும் இடைவேளையில் சிலைடு காண்பிப்பார்கள். அதில் “தோரண மலை முருகன் உங்களை அன்போடு அழைக்கிறார்” என முருகன் நின்ற கோலத்துடன் இருக்க.. அவர் அருகே மயில் தோரணையாக காட்சியளிக்கும்.
மயில் தோரணையா…? இல்லை மயில் அருகே இருக்கும் முருகன் தோரணையா…? இல்லை அவர் கையில் வைத்திருக்கும் வேல் தோரணையா? என்று நம் மனதுக்குள் கேள்வி கேட்கவைத்த சினிமா சிலைடு அது.
ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது. இங்கே எல்லாமே தோரணைதான். முதல் கட்டமாக இங்குள்ள மலையே தோரணைமலைதான்.
அந்த தோரணையான மலையையும், முருகனையும் தரிசிக்க வேண்டும்.
எப்படி.. ? எந்த நாளில்.. ? எப்போது? என பல கேள்விகள் என்னுள் எழுந்தது.https://arcus-www.amazon.in/dp/B0CNRW2LWF/ref=sr_1_24?qid=1700655860&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-24


