தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய மாநகராட்சி 6வது வார்டு பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையா நகர் மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர், லூர்தம்மாள் புரம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துரிதப்படுத்தினார். ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்த்சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


