ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ரெஜினி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி அவர்களின் ஆலோசனையின் படி தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆர்.சி. நடுநிலைப்பள்ளி செய்துங்கநல்லூரில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், மரிய ஜெயசீலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காது மூக்கு ,தொண்டை மருத்துவர், மனநல மருத்துவ,ர் கண் மருத்துவர் ஆகியோர் கலந்துகொண்டு மதிப்பீடு செய்தனர். இம் முகாமில் சுமார் 70 மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயன் பெற்றனர் . இம்முகாமிற்கான ஒழுங்குகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


