பள்ளி கல்வித்துறையின் சார்பாக பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப் பெற்று அதில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரி பள்ளி (இருப்பு ) இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி வளாகம், வைத்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அவர்களின் ஆலோசனை படியும், உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனைவரின் வழி நடத்துதலின்படியும், தொடக்கநிலை உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் முத்துக்குமார் மற்றும் மரிய ஜெயசீலா அவர்களின் தலைமையில் மூன்று நாட்களாக மாணவர்களின் கலைத்திறன் வெளிப்பட கவின் நுண்கலை ,இசை, நடனம் ,நாடகம் ஆகிய வகைகளில் நடைபெற்றது. வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் வில்சன் ராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி , ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.


