சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டிற்கு தீவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி முத்துலட்சுமி (32). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாண்டி மகன் மகாராஜா (41). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் மகராஜன் முத்துலட்சுமி வீட்டுக்கு தீ வைத்து விட்டாராம். இதில் வீட்டில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பவுல் லோஸ் வழக்கு பதிவு செய்து மகாராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


