வல்லநாட்டில் தொற்றா நோய்கள் தடுப்பு முறை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கருங்குளம் மற்றும் ஆழ்வார் திருநகரி வட்டார கிராம சுகாதார செவிலியர்களுக்கு தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, மருத்துவ அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். இந்திய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மற்றும் யோக முறைகளில் உள்ள நோய்தடுப்பு மருந்துகளை முறையே மருத்துவர்கள் முருகப் பொற்செல்வி, நாகராணி, லட்சுமிகாந்த், இந்துமதி ஆகியோர் விரிவாக செவிலியர்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவர் செல்வகுமார், ரதிசெல்வம், மருந்தாளுனர் கமலவல்லி, பணியாளர்கள் வேம்பன், ஆறுமுகம் மேரி, செல்வி ஆகியோர் செய்து இருந்தனர்.


