கருங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிபிஎஸ் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வட்டார தலைநகரங்களில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் சக்தி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் லூயிஸ் பூபாலராயன் கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். ஆசிரியர் வேலாயுதம் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020 ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடன் வழங்கிட வேண்டும் உள்பட 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


