தூத்துக்குடியில் போல் பேட்டை பகுதியில் சாலை பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகரம் போல் பேட்டை 13 வது வார்டு மேற்கு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெற்று வரும் சாலை பணியினை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் ஜாக்குலின், மகளிர் அணி விஜயா ஆகியோர் உடன் இருந்தனர்.


