கருங்குளத்தினை சேர்ந்தவர் சின்னத்துரை, இவர் மனைவி முருகம்மாள். இவர்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ராஜம்மாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் சின்னதுரை எதிர்பாராத விதமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் முருகம்மாள் தன் மகள் ராஜம்மாளை விட்டு விட்டு ஊரைவிட்டே சென்றுவிட்டார். இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சிறுமி ராஜம்மாள் அவருடைய பாட்டி ஜானகி வீட்டில் வசித்து வருகிறார். அரியகுளம் சராதா பள்ளியில் 5 வது வகுப்பு படித்து வருகிறார். ராஜம்மாளை படிக்க வைக்க ஜானகி பாட்டியிடம் போதிய வசதி இல்லை. இதைப்பற்றி கேள்விப்பட்ட செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ராஜம்மாளுக்கு போதிய பண உதவி செய்து படிப்புக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி கொடுத்து பள்ளியில் தொடர ஏற்பாடு செய்தார். உதவி ஆய்வாளரின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.


