கருங்குளத்தினை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துலெட்சுமி. இவர் பாளையங்கோட்டை, கேடிசி நகர் ரோஸ் மேரியில் 10 வது வகுப்பு படித்து வருகிறார். தற்போது நடந்து முடிந்த 10 வது வகுப்பு தேர்வில் இவர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் தமிழில் 96 , ஆங்கிலம் 96, கணக்கு 97 அறிவியல் 99, சமூக அறிவியல் 97 ஆகமொத்தம் 484 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவியை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


