செங்கோட்டை நூலகத்தில் வைத்து வாசகர் வட்டம் சார்பாக செங்கோட்டை கவிஞர் ஐயப்பன் எழுதிய “மௌனத் தீ” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன் பா. சுதாகர் அவர்கள் தலைமை தாங்கினார். போட்டி தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் வரவேற்புரை ஆற்றினார் . எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை வெளியிட்டார் முதல் பிரதியை இலஞ்சி ராமசாமி பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் முத்தையா பெற்றுக் கொண்டார். இரண்டாவது பிரதியை கோவில்பட்டி எழுத்தாளர் பார்த்திபன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் இளங்குமரன் தங்கராஜ் வேளாண்மை துறை அலுவலர் ஷேக் மைதீன் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர் ஐயப்பன் ஏற்புரை வழங்கினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.


