தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தாக்கப்படுவது தொடர் சம்பவமாகி விட்டது.
கடந்த வாரத்தில் விழுப்புரத்தில் நடத்துனர் ஒருவர் பயணி ஒருவர் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். அதே போன்ற சம்பவம் நெல்லை சமாதானபுரத்தில் ஹாரன் அடித்ததற்காக காரில் வந்த நபர் கட்டபொம்மன் நகர் பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் சுரேசை தாக்கினார். காயமடைந்த ஓட்டுநர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை கண்டித்து நெல்லை மண்டலத்தில் அனைத்து பணிமனைகள் முன்பு சிஐடியு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் பணிமனை முன்பு இன்று சிஐடியு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சிவசுப்பு தலைமை வகித்தார். சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலிப் பூதத்தான் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


