1942-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் இரவில் உடன்குடி வீரர்கள் அம்மன்புரம் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் இராஜகோபால் தலைமையில்
இரகசியக் கூட்டம் நடத்தினர் இதில், வெள்ளை அரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்க வேண்டுமென்றால் நமக்குத் துப்பாக்கிகள் தேவை. குலசேகரன்பட்டினம் உப்பளத்தில் 12-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன. எனவே குலசேகரன்பட்டினம் உப்பளத்தின் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கிகளைக் கைப்பற்றலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு, இறுதியில் உப்பனத்தைத் தாக்க வேண்டும் எனத் தீர்மாளிக்கப் பட்டது.
உப்பளத்திற்குள் எவ்வாறு நுழைவது, எப்படித் தாக்குவது என்று பேச்சு எழுந்தபோது “சிவந்திக்களி வேவு பார்ப்பதில் மிகவும் திறமைசாவி எனவே நாளை (118-ம் தேதி) காலை சிவந்திக்களி உப்பளத்திற்குச் சென்று எவ்வாறு செல்ல ஷ் வேண்டும்? எந்த நேரம் செல்ல வேண்டும்? எப்படிச் சென்றால் துப்பாக்கிகளைக் கைப்பற்றலாம்? என வேவு பார்த்து வரவேண்டும்” எனத் தீர்மானித்தனர். அதன்படி 18-ம் தேதி காலையிலேயே சிவந்திக்கனி உப்பளத்திற்குச் சென்றார். உப்பளத்தில் வேலை செய்பவர்களிடம் ஏதேச்சையாக வந்ததைப்போல பேசி வேவுபார்த்து வந்து தம் நண்பர்களிடம் கூறினார். உடனே அளைத்து வீரர்களுக்கும் “19-ம் தேதி இரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் உப்பளத்திற்கு 1 1/2 மைல் மேற்கே உள்ள பைப்லைளில் கூட்டமௌவும், கூட்டம் நிறைவுற்றதும் குலசேகரன்பட்டிளம் உப்பளத்தைத் தாக்க வேண்டுமௌவும் எனவே தொண்டர்கள் தகுந்த ஆயுதங்களுடன் வரவும். என இரகசியச் செய்தி அனுப்பப்பட்டது.
திட்டமிட்டபடி 1942-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ம் நாள் இரவு 12 மணியளவில் குலசேகரன்பட்டினம் உப்பளத்திற்கு 11/2 மைல் மேற்கே இருந்த பைப்பு லைனில் (சீனி ஆலைக்குப் பதனீர் செல்லும் குழாய் ஆறுமுகதேரி இராஜகோபால் தலைமையில் ஒன்று திரண்டனர். வீரர்கள் உப்பளத்திற்குள் எவ்வாறு நுழைய வேண்டும் என இராஜகோபால் விளக்கினார். “நாம் அனைவரும் கூட்டமாகச்
செல்லக்கூடாது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து செல்ல வேண்டும். உப்பளத்தின் முள் கதவை உடைத்துக் கொண்டு ஒரு குழு உள்ளே செல்ல வேண்டும். மற்றொறு குழு உப்பளத்தின் கிழக்குப்புற முள்வேலியைப் பிய்த்துக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்ற உடன் இருவர் காவலாளியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் அவனிடம் இருக்கும் துப்பாக்கியைப் பிடுங்கி எடுக்க வேண்டும். மற்றொருவர் காவலாளியின் கால் கைகளைக் கட்ட வேண்டும்” எனத் தீர்மானிக்கப் பட்டது.
(தொடரும்)


