படிக்கலாம் வாங்க.
மேல்மருவத்தூர்
ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட்
பக்கம் 236
விலை 320
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கும். அவர் ஆற்றிய அற்புதங்கள், அடிகளார் நடத்திய ஆன்மிக மாநாடுகள், தெய்வம் இல்லை என்று மறுத்தவர்களையும் ஆத்திகர்களாக உருமாற்றிய விதம், ஆகமநெறியில் அமையாத கோவிலை உருவாக்கியது, பெண் குலத்தை உயர்வுபடுத்துவதற்காக நடைமுறைப்படுத்திய செயல்கள், சமூகப் பணியாற்றி வரும் சக்தி பீடங்களை உருவாக்கியமை, மேல்மருவத்தூரில் அமைந்துள்ள பிரமாண்ட தியான மண்டபம், மருவத்தூரை மருத்துவத்தூராக்கும் அடிகளாரின் முயற்சி, அன்னதானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான நல உதவி திட்டங்கள் ஆகியவை குறித்து ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கமாக இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மருவத்தூர் ஆலயம், சமூக புரட்சி செய்த ஆலயமாகும். Ê£தி, மத வேறுபாடின்றி அனைவரும் இங்கே வரலாம். கருவறைக்குள் சென்று பக்தியோடு அன்னைக்கு அர்ச்சனை செய்யலாம்.
பெண்களை வைத்து வேள்வி செய்யும் அற்புதமும் பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் பேரும் இங்கே உண்டு.
தமிழில் மந்திரங்களால் கருவறையில் அர்ச்சனைகளும், வேள்வி, கலச, விளக்கு பூஜைகளும் நடைபெறும் திருக்கோயில் இது.
ஆலயத்தில் நடைபெறும் எந்த விழா வானாலும் ஏழை, எளிய மக்களின் வயிறும், மனமும் குளிர வேண்டி அன்னதானமும், ஆடைதானமும் அளிக்கப்படுகின்றன.
விதவையருக்குத் தையர் எந்திரங்கள் வழங்குதல், ஊனமுற்றோர்க்கு உதவும் கருவிகள், பசுமாடுகள் வழங்குதல், உழவு மாடுகள் வழங்குதல், உழைத்து பிழைக்க எண்ணும் ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுகின்ற கருவிகளை வாங்கித் தருதல் போன்ற அறப்பணிகள் இந்த ஆலயத்தின் மூலமாகச் செய்யப்படுகின்றன. மேல்மருவத்தூர் பற்றி அடிகளாரின் பக்தர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களுமு தெரிந்து கொள்ள வேண்டிய அரிய விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.
-இளங்கோவன்.


