விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் 24ந்தேதி தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் வருகின்ற 24ம் தேதி தூத்துக்குடி கோட்டாட்சியர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பட்டா வாரிசு சான்றிதழ் ஜாதி சான்றிதழ் இலவச வீட்டுமனை பட்டா, இறப்பு, பிறப்பு, வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் மற்றும் பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் இந்த முகாமில் கொடுக்கலாம். விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


