தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் நூருல் நூருல் ஈமான் இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் ஆலிமா பட்டமளிப்பு விழா நடந்தது.
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு அமானுல்லா தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியின் முதல்வர் இம்தாதுல்லா ஆலிம் பாக்கவி கலந்து கொண்டு பட்டத்தை வழங்கினார். பெற்றோருக்கு பெருமை அளிக்கும் விதமாக மாணவிகளின் பட்டத்தை மாணவிகளின் தந்தைகள் பெற்றனர். 30 பேருக்கு இந்த நிகழ்ச்சியில் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முகைதீன் ஜாமியா மஸ்ஜித் தலைவர் முஹம்மது அலி, ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்து தலைவர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


