தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமர குருபரசுவாமிகள் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையம் ஆங்கில பேராசிரியர் பிலோமின் பாலா தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் தலைவரும், சர்வதேச மனித உரிமைகள் கழக உறுப்பினருமான சந்துரு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ராணி வரவேற்பு-ஆற்றினார். ஆசிரியை சாந்தி, சசி, ரேணுகா ஆகியோர் எண்ணும் எழுத்தும் விளக்கவுரை ஆற்றினர்.
ஜேஸ்மின் திலகவதி நன்றியுரை-வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர் பொன்முத்து சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


