கருங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர்நலத்துறை 2022&23 ம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் உழவர் பெருமக்களுக்கு ஜிப்சம், சிங்க் சல்பேட் மற்றும் வேளாண் கருவிகள் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது என்று கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தெரிவித்தார்.
வேளாண் உபகரண கிட்டில் கடப்பாரை, இரும்பு சட்டி, மண்வெட்டி, களைகொத்தி, கதிர் அரிவாள் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு துத்தநாகசத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
தற்போது கருங்குளம் வட்டாரத்தில் செய்துங்கநல்லூர் மற்றும் வல்லநாடு விரிவாக்க மையங்களில் சிங்க் சல்பேட், ஜிப்சம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கருங்குளம் வட்டாரத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேளாண் இடுப்பொருட்கள், வேளாண் பண்ணை கருவிகளை மானியத்தில் பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


