முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில், காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தனசேகர் நகரில் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் T.டேவிட் பிரபாகரன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி , மாநகர பொது செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், காங்கிரஸ் ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவ்ராஜ் மோகன்,மாநில பேச்சாளர் பார்த்திபன், மாப்பிள்ளையூரனி எட்வர்ட்,ரூஸ் வெல்ட், அசனார், காமராஜ், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜெயஜோதி, மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் வசந்தி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அசன் மைதீன், மீனவர் அணி கிளாடிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


