தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கீழ செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை மருத்துவ அலுவலர் டாக்டர்.செ.திவ்யாதலைமை தாங்கி துவக்கி வைத்தார்கள். நலக்கல்வியாளர் ஆ.முத்துகுமார், முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 28 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 18 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர் ஆ.கணேசன்
இம்முகாமில் இருட்டரை உதவியாளர் ந.எட்டையா, சுகாதார பார்வையாளர் ந.முத்துலட்சுமி, ப.முத்துவேல், மருந்தாளுநர் மு.ரமேஷ், ஆய்வக நுட்பனர் சு.ராஜேஷ், செவிலியர் சி.சிவேதா, சுகாதார தன்னார்வலர் சு.சுப்பு, மஸ்தூர் மா.மாரியம்மாள், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் தே.சந்தோஷ், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


