தூத்துக்குடிக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என திமுக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், தலைமை வகித்தாா். மேயர் ஜெகன் பொியசாமி, மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் வரும் ” 29ம் தேதி 30ம் தேதி என இரு நாட்கள் கலந்து கொள்ளும் மினிடைட்டல் பார்க் திறப்பு, கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை புதுமைப்பெண் விாிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தல் என 3 நிகழ்ச்சியில் கலந்து காெள்ளும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் அதே நேரத்தில் நிா்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் செயலாளர்கள் என பல அணி நிர்வாகிகள் கட்சி அறிவித்த நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமின்றி செய்த பணிகள் குறித்த மினிட்புக் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். அதுமட்டுமின்றி எதிர்வரும் 2026 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து அடிப்படை பணிகளையும் முறைப்படுத்த வேண்டும் என்று பேசினார்.
அமைச்சர் – மேயருக்கு புகழாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கடந்த ஆண்டை போல் மிகப்பொிய பாதிப்பு நமக்கு ஏற்பட்டு விடும் என்று பலர் அச்சத்தோடு வாழ்ந்தனர். அவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் எந்த கவலையும் படவேண்டாம் என்று எடுத்துக்காட்டும் விதமாக பல பகுதிகளிலிருந்து தேவையில்லாத உபாி நீர்கள் வந்த போதும் பக்கிள் ஒடை வழித்தடங்கள் உப்பாற்று ஓடை வழித்தடங்கள் இரண்டையும் முறையாக முறைப்படுத்தி பணிகளை மேற்கொண்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி மாநகர் முழுவதும் அனைவர் நலனையும் காப்பதற்காக காலையில் சூாியனாகவும் இரவில் சந்திரனாகவும் இருந்து எல்லோருக்கும் வௌிச்சத்தை கொடுத்து இரவு பகல் பாராமல் பணியாற்றியதால் அனைத்த தரப்பினரும் மனதார பாராட்டுகின்றனர்.
வேறு கட்சியை சோ்ந்த யாரும் எட்டிப்பார்க்கவும் வரவில்லை. உதவிகள் செய்யவும் வரவில்லை. அதனால் இந்த சாதனைகளை யெல்லாம் எடுத்துச்சொல்லி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்திக்கொண்டிருக்கும் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ெஜகன் பொியசாமி ஆகியோர் பணிகளுக்கு பாராட்டுகளை தொிவித்து கொள்கிறோம். என நிர்வாகிகள் புகழாரம் சூட்டினார்கள்.
கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் கஸ்தூாி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், ராஜாகன்னு, முத்துலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஜான்அலெக்ஸாண்டர், இராஜா, ராதாகிருஷ்ணன், ரமேஷ், மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, ஓன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருேகசன், ராதாகிருஷ்ணன், சின்னமாாிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


