ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் முடிவின்படி பொதுமக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுமக்களின் கோரிக்கைகளான ஸ்ரீவைகுண்டத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும், மூலக்கரை, சாமியாத்து, செக்காரக்குடி, கருங்குளம் போன்ற கிராமங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், தமிழக அரசு போக்குவரத்து துறையில் உள்ள பணியாளர்கள் பற்றாக்குறையை நிறைவேற்றக்கோரியும், மகளிருக்கு இலவச பேருந்து செல்லாத கிராமங்களுக்கு பேருந்து செல்ல வழியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் சிவசுப்பு தலைமை வகித்தார். கோரிக்கைளை விளக்கி சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான் பேசினார். முத்துசாமி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சுமணன், ஜுவானந்தம், ஆறுமுகம், கணேசன், ராமமூர்த்தி, முருகன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


