முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் துவக்க விழா கால்நடை மீனவர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து இன்று நடந்தது.
ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துகிருஷ்ண ராஜா வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் கோமதி இராஜேந்திரன் மரக்கன்று நடவுப் பணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் சித்தார்தன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த சுப்புலெட்சுமி, கண்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பத்மகலா, கணக்கர் உலகு, உதவியாளர் முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, நியூ பாசகரங்கள் முத்துப்பாண்டி, பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, மதுரிதா அறக்கட்டளை இயக்குனர் சந்திரசேகரன் ஆகியோர் மரக்கன்று நடவுப்பணியை மேற்கொண்டனர்.


