தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையம் வருகிற 30ம் தேதி திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி நிதியில் ரூ.53 கோடி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், வருகிற 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் கனிமொழி எம்பி, அமைச்சா்கள் நேரு, கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்கிறார்கள். இதனை முன்னிட்டு நேற்று அமைச்சர் கீதாஜீவன் பேருந்து நிலையத்தினை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.


