
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் படி ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி கிராமங்களில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 25 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
ஊராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், சிறுபாசனகுளங்கள், ஊரணிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள அடைப்புகள், போன்ற பணிகளை மேற்கொள்ளுதல், இதன் மூலம் மழைநீர் முறையாக நீர்நிலைகளுக்கு வருவதை உறுதி செய்ய முடியும். முற்செடிகள், புதர்கள் மற்றும் பிளாஸ்டிக்கள், ஆகியனவற்றை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றுதல்.
ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக அரசு கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடங்கள், பயணிகள் நிழற்குடைகள், சமுதாய நல கூடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் ஏனைய பொது கட்டிடங்களில் உறுதி தன்மையை ஆராய்ந்து சரிசெய்தல், தூர்ந்துபோன கிணறுகள், அடிபம்புகள் ஆகியனவற்றில் மழைநீரை சேமிக்க உரிய
நடவடிக்கை எடுத்தல், கிராமபுறங்களில் சமுதாயம் மற்றும் தன்னார்வமிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் தெரு பகுதியில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல், வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்பு அவசியத்தை வழியுறுத்தல் மற்றும் விழிப்புணர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பணிகள் ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.