தூத்துக்குடியில் உள்ள அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் வருகிற 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் NSE அகாடமி, சென்னை ஆகியோர் இணைந்து தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் வைத்து 22.09.2023 வெள்ளிக்கிழமை மற்றும் 23.09.2023 சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள 53 நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியுடைய நபர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்த உள்ளார்கள். எனவே வேலைவாய்ப்புக்காக காத்திருப்போர் இந்த முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் டிஆர் தமிழரசு கேட்டுக் கொண்டுள்ளார்.


