தூத்துக்குடியில் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியினை தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் சீ.சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கதர் கிராம பொருட்களை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொருட்களின் விற்பனை அதிகரிக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
ஆய்வின் போது, துணை இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள், சென்னை)கோ.அருணாச்சலம், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில் வாரியம், தூத்துக்குடி) பாரதி, மேலாண்மை இயக்குநர் (திருநெல்வேலி மாவட்ட பனைப்பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் லிட், தூத்துக்குடி) சரவணக்குமார், மேலாளர் (காதி கிராப்ட் விற்பனை அங்காடி, தூத்துக்குடி) ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


