குளத்தூரில் மின்னொளி ஆண் / பெண் கபாடி போட்டியினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் ஆனித் திருவிழாவை முன்னிட்டும், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டும் நடைபெற்ற மாபெரும் மின்னொளி ஆண் / பெண் கபாடி போட்டியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால், ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


