செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஜெய்துன் பீவி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ஓ.பி. முஸ்தபா யோகா வை துவங்கி வைத்தார். பள்ளிமாணவ மாணவிகளுக்கு யோகா ஆசிரியை ஆனந்த சொர்ண துர்கா பயிற்சி அளித்தார். ரகுமத் முஸ்தபா உள்பட பள்ளி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். துணை முதல்வர் பிச்சம்மாள் நன்றி கூறினார்.


