தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை நாசரேத் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். ஆனால் இந்த நேரத்தில் ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே செயல்படுகிறது.
இந்த நிலையில் தினமும் மாணவர்கள் அனைவரும் படிக்கட்டில் தொங்கி சென்றவாறு வேறு பேருந்து வசதி இல்லாமல் படிக்கட்டில் தொங்கி சென்றவாறு செல்கின்றனர்.
இதனால் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்கி சில நேரங்களில் உயிரிழக்க நேரிடும் எனவும் பெற்றோர்கள் அச்சம் அடைகின்றனர்.
இவ்வாறு பயணம் செய்கையில் பேருந்து நிறுத்தங்களில் ஏறி இறங்கும் பள்ளி கல்லூரி மாணவிகள் மீது படிக்கட்டில் தொங்கி செல்லும் ஒரு சில மாணவர்கள் வேண்டத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த நேரத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் தினமும் போலீசார் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


