ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி கோயிலில், தை அமாவாசைத் திருவிழா நாளை (ஜன.22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறதுதென் தமிழகத்தின் புகழ்மிக்க கோயில்களில் ஒன்றான ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலின் தை அமாவாசைத் திருவிழா நாளை (ஜன. 22) சனிக் கிழமை காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு கோலங்களில் எழுந்தருளும் சப்பர பவனி நடைபெறும். முக்கிய நிகழ்வாக 10ஆம் திருநாளான ஜன. 31ஆம் தேதி (திங்கள் கிழமை) தை அமாவாசை திருவிழா நடைபெறும். அன்றைய தினம் நண்பகல் 1 மணிக்கு உருகு பலகை தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மன் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் சிகப்பு சாத்தி கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி உலாவும் நடைபெறும்.பிப்.1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், நண்பகல் 1.30 மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.நிறைவு நாளான பிப். 2ல் (புதன் கிழமை) தாமிரபரணி நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் நீராடலும், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயன மங்கள தரிசனமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.,கருத்தப்பாண்டியன் நாடாா் செய்து வருகின்றாா்.


