நெல்லை ம.சு பல்கலைகழகத்தில் சுந்தரனார் அரங்கில் நாளை (21.11.2024) நடைபெறும் குலசாமி கருத்தரங்களில் இடைத்தாமிரபரணி நூல் வெளியிடப்படுகிறது. துணை வேந்தர் டாக்டர் சந்திரசேகர் இந்த நூலை வெளியிடுகிறார். மேலப்பாளையம் முஸ்லிம் கல்வி நிலயங்களின் தாளாளர் எல்.கே.எஸ். முகமது மீரான் இந்த நூலை பெற்று-க்கொள்கிறார்.
கடந்த 6 வருட காலமாக வணக்கம் மும்பை நாளிதழில் தொடராக முத்தாலங்குறிச் சி காமராசு எழுதிய “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற தொடர் இடைத் தாமிரபரணி என்ற பெயரில் நூலாக வெளிவருகிறது. இந்த நூலில் பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம், பழவூர், கீழக்கல்லூர், சுத்தமல்லி, கொண்டாநகரம், கருங்காடு, தருவை, முன்னீர்பள்ளம், திருவேங்கடநாதபுரம் வரலாற்றை எழுத்தாளர் எழுதியுள்ளார்.
மேலும் நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்கள். ஆதிச்சநல்லூர் உள்பட தொல்லியல் தளங்களில் நடந்த நிகழ்வுகள், தாமிரபரணி கரை தொல்லியல்கள், தாமிரபரணியை காப்பாற்ற நடத்தப்படும் சட்ட போராட்டங்கள், திருநெல்வேலியில் அமையவுள்ள ரிங் ரோடு உள்பட நிகழ்கால தாமிரபரணி சம்பவங்களையும் தொகுத்துள்ளார். ஒவ்வொரு தாமிரபரணி மைந்தர்கள் மட்டுமல்லாமல் நதிகளை நேசிப்பவர்கள் மத்தியில் இந்த நூல் இருக்க வேண்டும்.
ஏற்கனவே முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி தோன்றும் இடத்தில் இருந்து மேலச்செவல் வரை எழுதி அதை தலைத் தாமிரபரணி என்ற பெயரில் 1000 ம் பக்க நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலை காவ்யா பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது. இந்த நூல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகத்திலும் படிக்கலாம். தற்போது காவ்யா பதிப்பகம் இடைத் தாமிரபரணி நூலையும் வெளியிடுகிறது. இந்த நூலின் விலை 1100, நூலை பெற்றுக்கொள்ள 8760970002 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
இதே மேடையில் நடைபெறும் கருத்தரங்களில் குலசாமிகள் கட்டுரை தொகுப்பு நூல் எழுத்தாளர்கள் சுந்தரபாண்டியன் , டாக்டர் சுதாகர், டாக்டர் கமலா ஆகியோர் எழுதிய நூல்களும் வெளியிடப்படுகிறது.