மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையும் காவ்யா தமிழ் வட்டமும் இணைந்து நடத்தும் நம்ம குலசாமிகள் கருத்தரங்கு நாளை வருகிற 21 ந்தேதி காலை 10 மணிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக சுந்தரனார் அரங்கில் நடைபெறுகிறது.
கருத்தரங்கை பல்கலைகழக துணை வேந்தர் என். சந்திரசேகர் தலைமை தாங்கி துவக்கி வைத்து கருத்தரங்க மலர் மற்றும் நூல்களை வெளியிடுகிறார். பேராசிரியர் சி.சுதாகர் வரவேற்று பேசுகிறார். பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் கருத்தரங்க நோக்கவுரையாற்றுகிறார். கருத்தரங்க மலரை சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை பேராசிரியர் ஆ.தனஞ்சயன் பெற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியல் சுந்தரபாண்டியனின் காவேரி நாவலை மேல நீலித நல்லூர் பசும்பொன் தேவர் கல்லூரி பேராசிரியர் ஹரிஹரன் பெற்றுக்கொள்கிறார். பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியனின் ஊர் சுற்றும் விஞ்ஞானி நூலை சிற்பி பாமா பெற்றுக்கொள்கிறார். பேராசிரியர் பொ.நா.கமலாவின் தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம் நூலை மேட்ட மலை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலெட்சுமி பெற்றுக்கொள்கிறார்.முத்தாலங்குறிச்சி காமரா-சு எழுதிய இடைத் தாமிரபரணியை மேலப்பாளையம் பள்ளிகளின் தாளாளர், முஸ்லிம் கல்விச் சங்கம் செயலாளர் எல்.கே.எஸ் முகமது மீரான் பெற்றுக்கொள்கிறார்.
முனைவர் கோ. மதிவாணன் நன்றி கூறுகிறார்.
நிறைவு விழாவில் முனைவர் பெ. முருகன் வரவேற்று பேசுகிறார். பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஜெ.சாக்ரடீஸ் தலைமையுரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்டுரை வாசிக்கப்படுகிறது. காவ்யா சண்முகசுந்தரம் ஏற்புரை வழங்குகிறார். தொல்லியல் துறை ஆர்.சந்தியா நன்றி கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சுடலை முத்து நினைவு பொருநையின் செல்வன் விருது முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கும், பேராசிரியர் பொ.நா. கமலாவிற்கு இசக்கி நினைவு தொல்காப்பியச் செல்வி விருதும் வழங்கப்படுகிறது. விருதை துணை வேந்தர் பேராசிரியர் என்.சந்திரசேகர் முன்னிலையில் காவ்யா நிர்வாக இயக்குனர் முத்துலட்சுமி வழங்குகிறார்.