42. தாமிரபரணியில் மின்சார தேவை
நாட்டின் விடுதலைக்குப் பின் திருநெல்வேலி அருகே தாழையூத்தில் ‘இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற சிமெண்ட் தொழிற்சாலை தோன்றியது. ஏ அன்ட் எஃப் ஹார்வி மில்ஸ்ஸ§க்கு அடுத்ததாகத் தாமிரபரணி தண்ணீரைச் சார்ந்து உருவான ரெண்டாவது பெரிய தொழிற்சாலை இது தான். தாமிரபரணியிலிருந்து வினாடிக்கு 2 கன அடி என்ற விகிதத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டது. விக்கிரமசிங்கபுரத்திலுள்ள ஹார்வி மில், தன்னுடைய தண்ணீர்த் தேவையை வினாடிக்கு 1.66 கனஅடி என்பதிலிருந்து 5.66 கனஅடியாக உயர்த்திக் கொண்டது. இதே காலகட்டத்தில் தான் நடுத்தரமான தொழிற்சாலைகளான ‘சன் பேப்பர் மில்ஸ்’ மற்றும் ‘பாபநாசம் பேப்பர் மில்ஸ்’ ஆகியவை தோன்றின. எனினும், 1970 வரையிலும் தொழிற்சாலைகளுக்கான தண்ணீர்த் தேவை என்பது ஆண்டுக்கு 8 மில்லியன் கன மீட்டர்தான்.

தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 1960களின் பிற்பகுதியிலிருந்து திட்டமிட்டதொரு அசுர வளர்ச்சி தொடங்கியது. 1974இல் தூத்துக்குடி துறைமுகத்தை, அதன் அமைவிடத்தின் முக்கியத் துவம் கருதி, பெரிய துறைமுகங்களில் ஒன்றாக இந்திய அரசு அறிவித்தது. இந்தத் துறைமுகத்தை மையமாகக் கொண்டு, அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் பல தொழிற்சாலைகளின் விரிவாக்கத்தை அரசு ஊக்குவித்தது. தூத்துக்குடி பகுதி வளர்ச்சியைத் திட்டமிடுவதற்காக உயர் அதிகாரக் குழுவொன்றையும் அரசு அமைத்தது. தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநரிடமிருந்து யோசனைகளை உயர் அதிகாரக் குழு பெற்றது. அவர் பின்வரும் யோசனைகளைத் தெரிவித்தார்.

15 நாள்களுக்குத் தேவையான தண்ணீரை வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஸ்பிக் வளாகத்தில் பாலிதீனில் உருவாக்கப்பட்ட தண்ணீர்த் தேக்கத் தொட்டியை அமைப்பயது என்றும், இதற்காக மருதூர் அணையின் அருகே உயர் மட்டத்திலிருந்து தனியரு குழாய் அமைத்துத் தண்ணீர் கொண்டுவருவது என்றும் கருததுரை வழங்கினார்.
கோடைக் காலத்தில் தண்ணீர் வழங்குவதற்காக, சுத்திகரிப்பு நிலையத்தின் தலைமைப் பணி நிலையத்தையட்டிய பகுதியில் 30 முதல் 40 நாள்களுக்கு வழங்கக் கூடிய அளவுக்கு இணையான தண்ணீர்த் தேக்கத் தொட்டியை அமைக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரை செய்தார்.
இந்த மூன்று அம்சங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன. பொதுவாக, தாமிரபரணி பாசனப் பகுதியில் கடினமான காலகட்டம் என்பது ஏப்ரல் முதல் ஜூலை வரையாகும். வழக்கமான பருவமழைக் காலங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மூலமாக மழை பெய்துவிடும். எனவே ஒரு நாளுக்கு 20 மில்லியன் காலன் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்குவதில் பிரச்சினையிருக்காது. அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கும்போதுதான் பிரச்சினை தோன்றிவிடும்.

குறிப்பாக 1980இல் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை இரண்டுமே பொய்த்துப் போய்விட்டது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் இரண்டும் முறையே அணையின் நிறை நீர்மட்ட அளவான 143 அடியில் 118 அடியாவது தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் 99 அடி மற்றும் 84 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. அந்த ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரை யிலான நான்கு மாதங்களில் ஆறுமுகமங்கலம் குளத்தில் உயர் நீர் மட்ட அளவில் தண்ணீரை வைத்திருக்கப் பொதுப்பணித் துறையால் இயலவில்லை. இதனால் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பொதுப் பணித் துறையினர் சில யோசனைகளைத் தெரிவித்தனர் இந்தக் காலகட்டத்தில் வரும் கார் சாகுபடிக்கு உள்ளபடியே தேவையான தண்ணீர் அளவு எப்போதுமே கிடைப்பதில்லை. மேற்கண்ட் காலத்தில் தண்ணீர் வழங்கல் நிலைமையும் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியின் துணையாறான சேர்வலாற்றின் குறுக்கே, 1150 மில்லியன் கனஅடி கொள்ளளவில் அணையன்றைத் தமிழ்நாடு மின்வாரியம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பற்றாக்குறை மாதங்களின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை அந்தத் தண்ணீரைக் கொண்டு சமாளிக்கலாம். னுன்பது தான் அவர்கள் யோசனை.
அவர்களால் தெரிவிக்கப்பட்டதைப் போல, அதிகளவில் பயன்பெறும் ஸ்பிக் நிறுவனம், முப்பது நாள்களுக்குத் தேவையான கொள்ளளவுள்ள தண்ணீர்த் தேக்கத் தொட்டியை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு யோசனை கூறியது. மேலும், பேய்க்குளம் மற்றும் பொட்டைக்குளத்தை ஆழப் படுத்துவதன் மூலம் பாசன மதகுகளின் திறப்பு மட்டத்துக்குக் கீழே கூடுதலான தண்ணீரை நிறுத்துவதற்கான வாய்ப்பும் ஆராயப்பட வேண்டும் என்றும் இதன்மூலம், கூடுதல் தண்ணீரை இறைத்துத் தொழிற்சாலைகளின் தேவைகளை எதிர்கொள்ளலாம் என்றும் யோசனை கூறினர்.

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுப்பது பற்றியும் உயர் அதிகாரக் குழு பரிந்துரைத்தது. மொத்தத் தண்ணீர்த் தேவை ஒரு நாளுக்கு 23 மில்லியன் காலன்கள் என மதிப்பிடப்பட்டது. தொழிற் சாலைகளின் பயன்பாட்டுக்காகவும் தூத்துக்குடி துறைமுகத்துக்காகவும் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்கும் குழுவின் பரிந்துரைக்கு அரசாணை எண்.2289, பொ.ப.து., 12.11.1970 மூலம் அரசு ஒப்புதல் அளித்தது. தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு 23 மில்லியன் காலன்கள். திருவைகுண்டம் அணைக்கட்டுக்குக் கீழே வரும் தாமிரவருணி ஆற்றுத் தண்ணீரிலிருந்து 3 மில்லியன் காலன்கள், திருவைகுண்டம் அணைக் கட்டுக்கு மேலே 20 மில்லியன் காலன்கள், திருவைகுண்டம் அணைக்கட்டின் வடக்கு மற்றும் தெற்கு பிரதான கால்வாய்கள், மருதூர் அணைக்கட்டின் மேலக்கால், கீழக்கால் கால்வாய்கள் ஆகியவற்றை இழப்பைத் தடுக்கும் வகையில் பூசுவதன் மூலம் சேமிக்கப்படும் தண்ணீரிலிருந்து ஆறுமுகமங்கலம் குளத்திலிருந்து ஒரு நாளுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் எடுக்கப்படும் என்று திட்டம் வகுத்தனர்.
1972 ஜூலை 20ஆம் தேதியிட்ட அரசாணை எண் 1211, ஒரு நாளுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீரைப் பல்வேறு தொழிற் சாலைகளுக்கும் ஒதுக்கியது.

தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் மேலே கூடுதலாக, தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஒரு நாளுக்கு 4 மில்லியன் காலன் தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் வடக்கு பிரதான கால்வாயில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து தண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டது .
தாமிரபரணி படுகையை ஆய்வு செய்தவரான கிழக்கிந்திய கம்பெனி யின் கர்னல் ஏ.டி. காட்டன், ஆற்றின் மேற்பகுதியில் தண்ணீரைச் சேமிப்பதற்காக அணையன்றைக் கட்டலாம் என யோசனை தெரிவித்தார். பின்னர், விரிவான ஆய்வொன்றை மேற்கொண்ட கேப்டன் ஹார்ஸ்லி, சொரிமுத்தையன் கோயில் அருகே தாமிரவருணிக்குக் குறுக்கே அணையன்றைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கையன்றைத் தயாரித்தார். 1850 தொடக்கம், ஏராளமான ஆய்வுகள், திட்டங்கள். ஆனால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீண்ட கால வலியுறுத்தல்களுக்குப் பின், 1936இல் பாபநாசம் அணைத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது; 1943இல் பாபநாசம் அணை கட்டிமுடிக்கப் பட்டது.
ஆற்று மதகின் வழி, தாமிரபரணி ஆற்றுக்குத் தண்ணீர் திறக்கப்படு கிறது. அதேநேரத்தில் சேர்வலாறு சேருமிடத்தில் இரும்புக் குழாய்வழி செல்லும் தண்ணீரை முறைப்படுத்துவதற்காக தடுப்பு அணையன்று கட்டப்பட்டது. இந்தக் குழாய் வழி பாபநாசம் நிலையத்துக்குத் தண்ணீர் எடுத்து வரப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் குழாய்களின் கொள்திறன், வினாடிக்கு 40 கனமீட்டர் (வினாடிக்கு 1400 கனஅடி). பாபநாசம் அணையின் முழுக் கொள்ளளவு தண்ணீர், 42.50 மில்லியன் யூனிட்கள் மின்சாரத்துக்கு இணையானது. பாபநாசம் மின்நிலையத்தின் உற்பத்தித் திறன் 28 மெகாவாட். 1970-/1986இல் சேர்வலாற்றின் குறுக்கே அணையன்றைத் தமிழ்நாடு மின்வாரியம் கட்டியது. இந்த அணையின் கொள்ளளவும் 30 மில்லியன் கன மீட்டர் (1225 மில்லியன் கனஅடி). . அணையில் 20 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தையும் அமைத்தது. பாபநாசம் அணையும் சேர்வலாறு அணையும் சுரங்கக் குழாய்ப்பாதை வழி இணைக்கப் பட்டிருக்கின்றன. தாமிரபரணி தண்ணீர், சேர்வலாற்றுக்கு எடுக்கப்பட்டு, சேர்வலாறு மின்நிலையத்தில் மின்னுற்பத்தி செய்யப்படும்.

வெளிவிடப்பட்ட தண்ணீர், திருப்பு அணையிலிருந்து பாபநாசம் மின்நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கே மீண்டும் மின்னுற்பத்தி செய்யப்படும். அதன் பிறகே, பாசனத்துக்காக ஆற்றில் தண்ணீர் விடப்படும்.
தூத்துக்குடியில் 1050 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையமொன்றைத் தமிழ்நாடு மின்வாரியம் நிறுவியது. 1979 இல் முதல் அலகும் 1991இல் கடைசி அலகும் செயல்படத் தொடங்கின. மின்னுற்பத்தி நிலையங்கள் செயல்படத் தொடங்கியது.
1979இல் தமிழகத்தின் மொத்த மின்னுற்பத்தித் திறன் 1909 மெகாவாட் ஆக இருந்தது. எனவே, மாநிலத்தின் மின்னுற்பத்தி யைக் கணிசமான அளவுக்குத் தூத்துக்குடி அனல்மின் நிலையம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
தாமிரவருணி தண்ணீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு பட்டியலில் தமிழகத்தின் மொத்த மின்னும்பத்தித் திறன் 0075 மெகாவாட்கள். ஆக, மாநிலத்தின் மின்னும்பத்தித் திறனில் இருபது சதவீதத்தைத் தூத்துக்குடி மின்நிலையம் உற்பத்தி செய்கிறது. 1998இல் மாநிலத்தின் மொத்த மின்னுற்பத்தி 23063.66 மில்லியன் யூனிட்கள் ஆகும். தூத்துக்குடி அனல்மின்நிலையத்தின் பங்களிப்பு 6905.66 மில்லியன் யூனிட்கள் ஆகும். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வடக்கு பிரதான கால்வாய் வழியாக தடையின்றித் தண்ணீர் வழங்கப் படுவதை உறுதிசெய்யவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. ஆனால், இவ்வாறு மின்நிலையத்துக்கு வழங்குவது, விவசாயத்துக்கான தண்ணீர் வழங்கலைப் பாதிப்பதாக விவசாயிகள் புகார் கூறினர்.
தாமிரபரணி ஆற்றின் கரைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகின. அவற்றின் தண்ணீர்த் தேவைகள் அனைத்தும் தாமிரவருணி ஆற்றிலிருந்தே எடுக்கப்பட்டன. தூத்துக்குடி வட்டாரத் தொழிற்சாலைகளுக்கான தேவைதான் மிக அதிகம், 2000 ஆம் ஆண்டு கணக்கின் படி நாளுக்கு 20 மில்லியன் காலன் வழங்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற உடன்பாட்டின்படி, ஆறுமுகமங்கலம் குளத்தில் ஆண்டு முழுவதும் குளத்தின் நிறை நீர்மட்டத்தில் தண்ணீர் நிறுத்தப் பட வேண்டும்.
ஆறுமுகமங்கலம் குளத்தில் முழு அளவு தண்ணீர் இருக்கும்போது, நீர்ப்பரப்புப் பகுதி 3.36 மில்லியன் சதுர மீட்டர். இந்தப் பகுதியில் ஒரு நாளில் 4 மி.மீ.யிலிருந்து 12 மி.மீ. வரை தண்ணீர் ஆவியாகிறது. சராசரியாக ஒரு நாளுக்கு 8 மி.மீ. என்று வைத்துக்கொண்டால், குளத்தில் முழு அளவு தண்ணீர் நிற்கும்போது ஓராண்டில் ஆவியாகும் தண்ணீரின் அளவு 10 மில்லியன் கனமீட்டர் ஆகும்.
வழியில் ஏற்படும் இழப்பையும் கருத்தில்கொண்டு, அணைகளி லிருந்து மேலும் கூடுதலான தண்ணீரை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் குடிநீர் வழங்கவும் தாமிரபரணி தேவைப்பட்டது.
1866 நவம்பர் 1இல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மூன்று நகர்களும் நகராட்சிகளாக உருவாக்கப்பட்டன. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை நகராட்சிகளுக்குத் தேவையான குடிநீருக்குப் பிரதான ஆதாரங்கள், பாசனக் குளங்களும் கால்வாய்களும்தான். ஆனால், தூத்துக்குடிக்குத் திருவைகுண்டம் வடக்கு பிரதான கால்வாய் மூலம்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இவற்றுக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு மிகவும் குறைவே.
நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தாமிரவருணி ஆற்றையட்டி யுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் யாவும் தங்கள் தேவைக் தாகத் தாமிரவருணியிலிருந்து தண்ணீரை எடுக்கத் தொடங்கின. 1970 வரையிலும், எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 6 மில்லியன் கனமீட்டர் மட்டுமே. ஆனால், 2000இல் இந்தத் தண்ணீர்த் தேவை, ஆண்டுக்கு 26 மில்லியன் கனமீட்டராக அதிகரித்துவிட்டது. 2000இல் ஒவ்வொரு நகருக்கும்/ஊருக்கும் வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட குடிநீரின் அளவு பட்டியலில்.

தாமிரவருணி ஆற்றிலிருந்து பல நகர்களுக்கும் கிராமப்புறப் பகுதி களுக்கும் குடிநீர் வழங்குவதற்காக மேலும் பல குடிநீர்த் திட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன (2000இல்). இந்த வகையில் எதிர்பார்க்கப் படும் தண்ணீர்த் தேவையின் அளவு 122 மில்லியன் கனமீட்டர்; இதன் மூலம் குடிநீருக்கான மொத்தத் தேவை மட்டுமே 150 மில்லியன் கனமீட்டர் ஆகிவிடும். மாநில தண்ணீர்க் கொள்கைப்படி, மாநிலத்தின் முன்னுரிமையில் குடிநீர் வழங்கல்தான் முதலிடம் வகிக்கிறது. இதை மறுக்க முடியாது என்றாலும், தாமிரவருணிப் படுகைக்கு வெளியே தொலைதூரப் பகுதிகளுக்கு எல்லாம் இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுவதாக விவசாயிகள் குறைப்படுகின்றனர். தொழிற் சாலைகள் மற்றும் மாநகராட்சிகளின் தேவைக்காக எடுப்பதன்மூலம் மணிமுத்தாறு அணையிலிருக்கும் தண்ணீர் குறைக்கப்படுகிறது; இதனால், தங்களுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று மணிமுத்தாறு பெருங்கால் விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மணிமுத்தாறு பிரதான கால்வாய் விவசாயிகளும் இதே கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கும் மாநகராட்சிகளுக்கு மாகக் கோடைக் காலத்தில் எடுக்கப்படும் தண்ணீர் காரணமாக, பாபநாசம்-சேர்வலாறு அணைகள் வற்றச் செய்யப்படுவதால், ஜூன் முதல் தேதி இவற்றில் 500 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பதில்லை என்று தலைமடைப் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய முன்பட்ட கார் சாகுபடிப் பரப்பு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கடம்பாக்குளம் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். வடக்கு பிரதான கால்வாயில் தொடர்ந்து வழங்கப்படும் தண்ணீரால் பயன்பெறும் பேய்க்குளம் விவசாயிகள்கூட, இதே புகாரைத் தெரிவித்ததுடன், தீர்வைத் தேடி நீதிமன்றத்துக்கும் சென்றிருக் கின்றனர். முடிவாக, தங்களுடைய தேவைகளைச் சமாளிப்பதற்காக, சிறப்புத் தண்ணீர் திறப்புகளுக்கு எனத் தனிப்பட்ட ஆணையைப் பெற்றிருக்கும் வெற்றிலை விவசாயிகள்கூட, தொழிற்சாலைகளா. வேளாண்மையா – எதற்கு முன்னுரிமை என்று அரசு முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர்.
(தொடரும்)


