செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவில் 19ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதீஸ்வரரும் தீர்த்த யாத்திரை சென்றபோது தாமிரபரணி நதிக்கரையில் நடராஜப் பெருமான் நாட்டியமாடி திருக்காட்சி தந்தருளிய தலம். தென்தில்லை என அழைக்கப்படும் இந்த தலத்தில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இக்கோயிலில் வியாக்கிரபாதீஸ்வரர் சிவனாகவும், சிவகாமி அம்மையார் அம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர்.
அபிஷேக ஆராதனையில் மிகவும் போற்றப்படுவது ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகமாகும்.
பழமையும் சிறப்புகளும் வாய்ந்த இத்திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக மூலவருக்கு மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தயிர், தேன், பஞ்சாமிருதம், இளநீர், பன்னீர், வீபூதி மற்றும் சந்தணம் போன்ற 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்நது அன்னாபிஷேகம் நடைபெற்று காய் கனி அன்ன அலங்காரத்துடன் பக்தர்களுக்கு செவை சாதித்தார். நிறைவாக நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி மற்றும் பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.