பாளையங்கோட்டை கோபாலன் மகாலில் நெல்லை பாரதி புத்தகாலயம் நடத்திய புத்தகக் கண்காட்சியில் பொருநை நாகரீகத்தின் பெருமை என்னும் கருத்தரங்கம் நடந்தது.
எழுத்தாளர் நாறும்பூ நாதன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சிவகளை மாணிக்கம், மருத்துவர் ராமானுஜம் ஆகியோர் பேசினார்கள். இளம் எழுத்தாளர் சூடாமணி , சமூக வளைத்தலங்களில் பழமைகளைப் பறை சாற்றி வரும் சதீஷ் பாராட்டப்பட்டனர். நாட்டார் குளம் எஸ்.கே திருப்பதி, தெற்கு காரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு. நெல்லை முத்தமிழ், பாப்பாக்குடி செல்வ மணி, செவிலியர் மணிகண்டன், கோபால், பேரா, கிருஷி , கந்தசாமி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


