செங்கோட்டையில் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வழக்கறிஞர் வெங்கடேசன் அலுவலக வளாகத்தில் வைத்து ஒன்றிய அரசை கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சமையா் எரிவாயு விலை உயர்வை குறைத்திட கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்ப பெற வலியுறித்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடியேந்தியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமைதாங்கினார். மாவட்ட விவசாய அணி துணைத்தலைவா் காதர்அண்ணாவி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் அமானுல்லாகான் நகர அவைத்தலைவர் காளி ஆகியோர் முன்னிலைவகித்தனா். நகர துணைச் செயலாளர் பீர் முகமது, வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பால் ஐயப்பன், நகர விவசாய அணி அமைப்பாளர் தில்லை நடராஜன், நகர தொண்டரணி அமைப்பாளர் டெய்லா்சரவணன், பூத் கமிட்டி பொறுப்பாளர் சங்கர் கணேஷ், அகமது காமில் என்ற பாவா, பிரதிநிதிகள் கரீம், அப்பாஸ் கழக முன்னோடி செல்வம், சிங்கம் நூர் முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.