செங்கோட்டையில் நகர திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கோட்டையில் நகரத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், சமையல் எரிவாயு விலையைக் குறைத்திடவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்தும் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச்செயலாளா் ரஹீம் தலைமை தாங்கினார். சிபிஐ நகரச்செயலாளா் சுப்பிரமணியன், மாநில பொறுப்பாளர் போஸ், ஏஐடியுசி மாவட்டுத்தலைவா சாமி திமுக மாவட்ட துணைச்செயலாளா் பேபிரெசவுபாத்திமா, நகர அவைத்தலைவர் காளி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர்கள் இசக்கித்துரைபாண்டியன், ராஜா முகம்மது, மாணவரணி அமைப்பாளர் இம்ரான்கான், வார்டு செயலாளர் எஸ்எம்.சேட், தகவல் தொழில்நுட்ப பிரிவு சன்சாகுல், நீராத்துலிங்கம், ஞானசேகர், மாரியப்பன், அமீனா, முகம்மதுஆதாம், அப்பி(எ)முருகன், வெங்கட்ராமன், அஜீம், சிபிஐ நிர்வாகிகள் சுந்தர், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரப்பொருளாளா் ஜெயராஜ் நன்றி கூறினார்.