குரும்பூர் அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் வேம்புமுத்து மகன் மகேஷ் துரை (34). நேற்று இவர் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த வடமலை மகன் சிவ சுடலை (21), முத்துகுமார் மகன் நிதிஷ்குமார் (25) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் குரும்பூரில் இருந்து ஆறுமுகநேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
தண்ணீர்பந்தல் என்ற பகுதியில் சென்றபோது வேகத் தடையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் மகேஷ் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


