வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அஸ்ட்ரோகிளப் சார்பில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்டம் தோறும் அஸ்ட்ரோ கிளப்புகள் துவக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் குறித்த விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு அட்டைகளை வழங்கி நிலா பாடல்கள் மூலம் வானியல் குறித்து பேசினார்.
முன்னதாக மாணவி மனிஷா வரவேற்றார். முடிவில் மாணவர் கதிர் பாண்டியன் நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, சுப்புலட்சுமி உள்ளீட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


