தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் 1973 -74 ஆண்டுகளில் 11ஆம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகள் முடிந்ததை தொடர்ந்து பொன்விழா கொண்டாடினர்.
முதல் கட்டமாக 40 முன்னாள் மாணவர்கள் தூத்துக்குடி விஇ ரோட்டில் உள்ள ஓட்டலில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில், சென்னை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். முதலில் மாணவர்கள் ஒவ்வொருவராக சுய அறிமுகம் செய்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி சேதுராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பொன் விழாவை டிசம்பருக்குள் குடும்ப விழாவாக நடத்த வேண்டும் என்றும் பாடம் கற்பித்து கொடுத்த ஆசிரியர்களை அழைத்து கௌரவிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்தனர். முன்னாள் மாணவர் கே ஞான தேசிகன் தமிழ்நாடு தலைமைச் செயலாளராக பணி புரிந்ததை தீரமகாராஜன் நினைவு கூர்ந்து பேசினார். சுசி புருஷோத்தமன் நாம் நான்கு குழுக்கள் அமைத்து பொன் விழாவை சிறப்புடன் நடத்த வேண்டும் என்று பேசினார்.
கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் தொழில் அதிபர்கள், ஆசிரியர் பணி, கால்நடை துறை பணி, வக்கீல் பணி, பொறியாளர் பணி, ரயில்வே துறையில் பணி, சுகாதார துறையில் பணி, தீயணைப்பு துறையில் பணி, கப்பல் துறையில் பணி, கார்ப்பரேட் கம்பெனிகள் போன்றவற்றில் மேலதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள்.
மேலும் நலத்திட்டங்கள் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் மராத்தான் ஓட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தட்சணாமூர்த்தி பழைய பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். லயனல் இறை பாடல் பாடினார் இறுதியில் முனைவர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


