நெல்லையில் எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் ரோட்டரி சங்கம் 3212 சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 30 ஆண்டுகளாக சிறப்பான சமூக சேவை ஆற்றியமைக்காக எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய பொறுப்புத் தலைவராகவும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, தோகா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில்; ரோட்டரி சங்க ஆளுநர் ஜெசிந்தா தர்மா, முன்ளாள் ரோட்டரி சங்க ஆளுநர்கள் ஜேசையா வில்லவராயர், சிவராஜா, ஷாஜகான் மற்றும் விருதுகள் குழு தலைவர் அருள்செழியன் உட்பட தென் மாவட்டங்களிலிருந்து ரோட்டரி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


